சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 88 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேரைக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சர்வதேச கடல் பரப்பில் வைத்து நீர்கொழும்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதோடு, இவர்கள் கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் முன்தினம் அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மேலதிக விசாரணைகளை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]