சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட கள் கைப்பற்றல்

சட்டவிரோதமாக

சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட கள் கைப்பற்றல்

சட்டவிரோதமான முறையில் 2 கொள்கலன்களில் எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 46 போத்தல் கள் ஞாயிற்றுக்கிழமை 15.07.2018 தம்மால் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு – எறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிவிரோதமான முறையில் கள் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து ஏறாவூர் பொலிஸ் பிரிவலுள்ள குமாரவேலியார் கிராமத்தில் வைத்து திடீர் சோதனையிட்டபோது இந்தக் கள் கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டன.

சைக்கிளில் இரு பக்கமும் குடி நீர் கலன்கள் காவிச் செல்வது போன்று இவை கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

2 கொள்கலன்களிலும் சுமார் 46 போத்தல் கள் நிரப்பப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ஏறாவூர்ப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என். ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் இந்தக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சட்டவிரோதமான முறையில் கள் எடுத்துச் சென்ற நபரைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]