சட்டவிரோதச் செயற்பாடுகள் கண்டுங் காணாமல் விடப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்

சட்டவிரோதச் செயற்பாடுகள்

சட்டவிரோதச் செயற்பாடுகள் கண்டுங் காணாமல் விடப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்

சட்டவிரோதச் செயற்பாடுகள் கண்டுங் காணாமல் விடப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும் என பாரளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி போன்ற விடயங்கள் சில பிரிவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகள் கண்டுங்காணாமல் விடப்படுகின்றன, இவற்றினை பொலிஸ் துறையினரின் பங்களிப்புடன் மாவட்டத்தில் உருப்படியான அபிவிருத்தியை அடைய முயல வேண்டும், என்று மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் ஜீ.சிறிநேசன் கேட்டுக்கொண்டார். திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டு, மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சட்டவிரோதச் செயற்பாடுகள்

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அபிவிருத்தியின் போது நாங்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் பிரச்சினைகள், பிரதேச செயலக மட்டங்களிலும், பிரதேச சபை ரீதியாகவும் எதிர் நோக்குகின்ற சவால்கள் பிரச்சினைகள், சட்விரோதமான சில செயற்பாடுகள் கண்டுங் காணமல் சில பிரதேசங்களில் நடைபெற்றுக் கொண்டிருப்பதனால், பொது மக்கள் பல பிரச்சினைகளை மக்கள் எதிர் நோக்குகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை ஒரு ஒழுங்குக்குக் கீழ்கொண்டு வருவது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.

கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் இந்த மண் வியாபாரம், கடத்தல், மரக்கடத்தல், கால்நடைகள் சட்டவிரோத கொண்டு செல்லப்படல், இதனை விடவும் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தி போன்ற விடயங்கள் சில சில பிரிவுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என கூறப்பட்டது. ஆனால் இவைகள் கண்டுங்காணாமல் விடப்படுகின்றன.
இவற்றுக் கெதிராக சில சயற்பாடுகளைக் கொண்டு செல்லுகின்ற அதே வேளைகளில் சட்டவிரோதமான செயற்பாடுகளை எங்களுடைய பொலிஸ் துறையினர் மற்றும் மது வரித்திணைக்களத்தினர் பங்களிப்புச் செய்து, இந்த மாவட்டத்தில் ஒரு உருப்படியான அபிவிருத்தியைச் செய்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சட்டவிரோதச் செயற்பாடுகள் சட்டவிரோதச் செயற்பாடுகள் சட்டவிரோதச் செயற்பாடுகள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]