சட்டமா அதிபர் பதவி நீக்கம் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்டமா அதிபர் ஜெப் செஷன் பதவி நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

நேற்று தனது ட்விட்டர் தளத்தில், சட்டமா அதிபர் ஜெப் செஷனின் சேவைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டமா அதிபர் பதவிக்கு தலைமை பணியாளர் மெட்டிவ் விடேகர் நியமிக்கப்படவுள்ளார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் டொனால்ட் ட்ரம்ப் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில், சட்டமா அதிபரின் பதவி நீக்கமும் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]