சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராக ஐ.தே.க போர்க்கொடி

ஊழல் மோசடிகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் அசமந்தப் போக்கில் செயற்பட்டுவருவதாகவும், முன்னாள் அரசின் ஊழல்மோசடிகள் குறித்த விசாரணைகளை கிடப்பில் போட்டு அதனை மூடிமறைக்க செயற்பட்டுவருவதாகவும் கூறி ஐக்கிய தேசியக் கட்யினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட ரவி கருணாநாயக்கவின் பிணைமுறி விவகாரம் குறித்த 8000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இரண்டு வாராத்தில் தயாரிக்க முடிந்துள்ள சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னாள் அரசின் ஊழல் மோடிச அறிக்கைளை இரண்டரை வருடங்கள் ஆகியும் பொருட்டில் எடுத்துக்கொள்ளாமைக்கான காரணம் என்ன? என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், எம்.பிகள் மற்றும் ஐ.தே.கவின் இணைந்து போட்டியிட்ட பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களும் சந்தித்து இது குறித்து தெளிவுப்படுத்தியுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் செயற்பட்டுவரும் சட்ட வல்லுனர்கள் முன்னாள் அரசின் காலத்தில் மௌமாகவே இருந்தனர். பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் செயற்பட்டுவரும் உயரிய இரண்டு அதிகாரிகளின் செயற்பாடு குறித்த பல விடயங்களை இதன்போது சுட்டக்காட்டியுள்ளனர்.

குறித்த இரண்டு அதிகாரிகளும் முன்னாள் அரசின் காலத்தில் அதிக சம்பளத்தை பெற்றதுடன், மத்திய வங்கிக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆலோசனை பணத்தையும் பெற்றுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் மோசடி விசாரணைகளை மூடிமறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும்.

அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவில் செயற்படும் மற்றுமொரு அதிகாரி சுனாமி ஏற்பட்ட போது மோசடியில் ஈடுபட்டமைத் தொடர்பிலான ஆதாரங்களும் பிரதமரிடம் இதன்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஊழல்மோசடிகளை மறைப்பதற்கு செயற்பட்டுவரும் அதிகாரிகளுக்கு எதிரான அரசின் நிலைப்பாடு குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]