சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்க பிரதமருக்கு அதிகாரம் கிடையாது

சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்க பிரதமருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், பொது ஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதால் சட்டமா அதிபர் அரசின் இலக்காக மாறியுள்ளார். சட்டமா அதிபருக்கு பல தீர்மானங்களை எடுக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்து வருகிறார். இன்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை தண்டிப்பதற்கு அரசமைப்பை மீறும் வகையில் விசேட நீதிமன்றமொன்றை ஸ்தாபிக்க அரசு நடவடிக்கையெடுத்துள்ளது. இதில் புதினமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் ஆதரவளித்து வருகின்றமை.

இந்த ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியதாவது,
தேசிய வருமான சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அரசு தயராகிவருகிறது. மஹிந்த ராஜபக்ஷவால் வழங்கப்பட்ட சலுகைகள் இதில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பில் மக்கள் அறியாதுள்ளனர். ஐ.தே.கவுக்கு, சு.கவுக்கும் ஆதரவளிப்பவர்கள் நாட்டு பற்றாளர்கள் என்றால், குறித்த சட்டமூலத்திற்கு எதிராக எழுச்சியடைய வேண்டும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]