சட்டத்திற்கு முரணாக ஆற்றின் உட்பகுதியில் மணல் அகழ்வு

மணல் அகழ்வு

சட்டத்திற்கு முரணாக ஆற்றின் உட்பகுதியில் மணல் அகழ்வு

சட்டத்திற்கு முரணாக ஆற்றின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் 8 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு உழவு இயந்திரங்கள் மணல்ஏற்றப்பட்ட இழுவைப்பெட்டிகளுடன் நேற்று (22) கைப்பற்றப்பட்டதுடன் எட்டு சாரதிகளும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் இவர்களிடம் காணப்பட்டபோதிலும் சட்டத்திற்கு முரணாக ஆற்றின் உட்பகுதியில் மணல் அகழ்ந்த குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சட்ட விரோதமான முறையில் மணல் அகழப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் குழுவினர் முந்தன்குமாரவெளி ஆற்றிற்குள் மணல் அகழ்வில் ஈடுபட்பட ஆறு உழவு இயந்திரங்களை கைப்பற்றியதுடன் சாரதிகளையும் கைதுசெய்து கரடியனாறு பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

மணல் அகழ்வு

இதேவேளை புத்தம்புரி ஆற்றுக்குள் மணல் அகழ்ந்த சாரதிகளும் உழவு இயந்திரங்களுடன் கைதுசெய்யப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சாரதிகள் எட்டு பேரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கபட்டுள்ளனர். இவர்கள் 24.01.2018 ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]