மூங்கிலாற்றிலிருந்து மூங்கில்களுக்குள் சிக்குண்ட நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் மூங்கிலாற்றின் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டு மரணித்த நிலையில் சிறுவனின் சடலத்தை மீட்டெடுத்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 20.05.2018 பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பத்தில் மண்டூர் கணேசபுரத்தைச் சேர்ந்த உமாபதி கிஷான் (வயது 15) என்பவரே மரணித்துள்ளார்.

இவர் சம்பவதினம் நண்பகலளவில் தனது நண்பர்கள் சிலருடன் மூங்கிலாற்றில் உல்லாசமாக நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
சிறுவனுடன் நீராடிக் கொண்டிருந்த ஏனைய சிறுவர்கள் இந்த விவரத்தை அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக கிராம மக்கள் ஆற்றுப் பகுதியெங்கும் தேடுதலை மேற்கொண்டபோது காணாமல்போன சிறுவனின் சடலம் ஆற்றுக் கரைகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில்களுக்கிடையில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்டுள்ளனர்.

சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு உடற் கூறாய்வுக்காக கொண்டு வரப்பட்டது. பொலிஸார் சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]