சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் துஷ்பிரயோகம்?

9 வயதான சிறுவன் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிலாபம் – இரணவில, சமிதுகமயை சேர்ந்த ஜுவான் ஜேடிகே சுதீர நிர்மல் என்ற 9 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் கடந்த 25 ஆம் திகதி முதல் காணமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், இனந்தெரியாத நபர் குறித்த சிறுவனை அழைத்து சென்ற காணொளி அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் பாதுகாப்பு கெமராவில் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளை அடுத்து, குறித்த சிறுவனின் சடலம் நிர்வாணமாக இரணவில காட்டுப் பகுதியில் இன்று (27) காலை மீட்கப்பட்டுள்ளது

குறித்த சிறுவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]