சடலமாக பெண் மீட்பு

சடலமாக பெண் மீட்பு

மொரட்டுவை, ராவதாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீ்ட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

44 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கொலையாளிகள் குறித்த தகவல்களும் இதுவரை பதிவாகவில்லை என்று பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]