சசிகலாவை விட சொகுசாக வாழும் நடிகர் திலீப்

நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் சிறையில் ராஜ வாழ்க்கை வாழ்கிறாராம்.

பிரபல நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கடந்த மாதம் 11ம் தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது காவலை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறையில் திலீப் ராஜ வாழ்க்கை வாழ்வதாக அவருக்கு பக்கத்து அறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் மலையாள மீடியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.

திலீப் எப்பொழுதும் அதிகாரிகளின் அறையில் தான் இருப்பார். சிறை அதிகாரிகளுக்கு தயாரிக்கப்படும் உணவை தான் திலீப் சாப்பிடுவார். தூங்க மட்டுமே தனது அறைக்கு வருவார் என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சொகுசாக இருப்பது போன்று ஆலுவா சிறையில் திலீப் மிகவும் சொகுசாக இருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]