சசிகலாவை சின்னம்மா என கூற மறுத்த பிரபல இயக்குனர்….

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100ஆவது பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, விழா மேடையில் பேசிய கலைஞர்கள் அனைவரும் சசிகலாவை சின்னம்மா என குறிப்பிட்டு தங்களது உரையை தொடங்கினார்கள். ஆனால், இயக்குனர் பாரதிராஜா மட்டும் விதிவிலக்காக, சசிகலாவை சின்னம்மா என அழைக்காமல் சின்ன மேடம் என தனது உரை முழுவதும் குறிப்பிட்டிருந்தார்.

bharathiraja sasikala-natarajan

மேலும், “என் தமிழ் மண் சார்ந்த ஒரு பெண் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நீங்கள் மக்கள் மனதை ஜெயித்து இந்த இடத்துக்கு வந்துள்ளீர்கள்” என சசிகலாவை புகழ்ந்து பேசிவிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார். என்னதான் சசிகலாவை புகழ்ந்து பேசினாலும், அவரை சின்னம்மா என பாரதிராஜா அழைக்காதது, அங்கிருந்த சசிகலா ஆதரவாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது.