சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் காலமானார்

மறைந்த முன்னால் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தோழியாகிய சசிகலாவின் கணவரான நடராஜனுக்கு 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவர் குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

நடராஜன்

நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த டி.டி.வி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார்.

இந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக இன்று நள்ளிரவு 1.35 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

நடராஜன்