சங்கானை சிவப்பிரகார இந்து ஆரம்ப பாடசாலை க்கான புதிய கட்டிடம் இன்று (31) திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம்

சங்கானை சிவப்பிரகார இந்து ஆரம்ப பாடசாலை க்கான புதிய கட்டிடம் இன்று (31) திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் நவரத்தினம் ரவிவண்னண் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் விருந்தினர்கள், பாடசாலை பாண்ட் இசை வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துக்கள் இசையின் மத்தியில், இக்கட்டிடத் தொகுதியினை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பாடசாலையின் பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்ததுடன், பாடசாலைக் கட்டிடத்தொகுதியினை நாடாவெட்டித் திறந்து வைத்தார்.

இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.க வைத்தீஸ்வரக் குருக்களின் இறை ஆகியுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.சங்கானை சிவப்பிரகார இந்து ஆரம்ப பாடசாலை (1)

உலக வங்கி நிதி அணுசரணையின் மூலம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக வழங்கப்பட்ட 6.4 மில்லியன் ரூபா நிதியில் இந்து ஆரம்ப பாடசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி யுதிகதாக அமைக்கப்பட்டுள்ளது.

சங்கானை வாழ். முக்களின் பங்களிப்பு மற்றும் பழைய மாணவர் சங்கம், வெளிநாட்டில் உள்ள சங்கானை வாழ் மக்களின் நிதிப் பங்களிப்பின் மூலம் இப்பாடசாலைக்குரிய கட்டிடம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டு, இப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னர் சங்கானை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப பாடசாலை நடைபெற்று வந்த நிலையில், நேற்று சங்கானை சிவப்பிரகாரம் இந்து ஆரம்ப பாடசாலைக்கான புதிய கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாடசாலைப் புதிய கட்டிடத் தொகுதிக்கான இந்து ஆரம் சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன், இந்த நூலின் முதற்பிரதியினை, யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

ஆதனைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் பாடசாலை அதிபர் மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர் நேர்வேட் உதயகுமார். தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ ஆகியோரினால் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னமும் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். அதவேளை, இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள் பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கி வைத்தும் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்கத்தின் பொது மக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]