சங்கரை பாராட்டிய ரஜினி

சங்கரை பாராட்டிய ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘2.0’ பிரமாண்ட பொருட்செலவில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் உருவாக்க காட்சிகள் வெளியிடப்பட்டது.

இதில் ரஜினி சிறப்பு கண்ணாடியை அணிந்து, தான் நடித்த காட்சிகளை பார்த்து ரசித்தார்.சங்கரை பாராட்டிய ரஜினி

இதுகுறித்து ரஜினி கூறுகையில், இயக்குனர் சங்கர் 3டி-யை மனதில் வைத்துதான் இந்த கதையை எழுதி இருக்கிறார்.

படத்தில் நான் வரும் 3டி காட்சியை பார்த்து மெய்மறந்து போனேன். அது ஒரு பிரமாண்ட அனுபவம். இதற்காக சங்கரை பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.