சங்கருடன் இணையும் அஜித் ?

சங்கருடன் இணையும் அஜித் ?

 சங்கருடன் இணையும் அஜித் ? : இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித் நடித்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ‘விவேகம்’ படத்திற்குக் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘விவேகம்’ ரிலீசிற்கு முன்பே மீண்டும் அஜித் படத்தை இயக்குவது சிவாதான் என்று அஜித் தரப்பில் கூறப்பட்டது. அப்போதே என்னதான் வெற்றி கூட்டணியாக இருந்தாலும் இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து ஒரே இயக்குனரின் படத்தில் நடிப்பது சலிப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் தரப்பில் கருத்து நிலவியது.

ஆனால் ஷங்கர் 2.௦. படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்ட நிலையில் ‘முதல்வன்’ இரண்டாம் பாகத்தில் அஜித்துடன் இணையப்போகிறார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ஏற்கனவே ‘ஜீன்ஸ்’, ‘எந்திரன்’ படங்களில் ஷங்கருடன் அஜித் இணைவதாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.