சகல பௌத்த மத பீடங்களும் ஞானசார தேரருக்கு மன்னிப்பு கோரி கடிதம் கையளிப்பு…

நீதிமன்றத்தை அவமதித்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையிலுள்ள சகல பௌத்த மத பீடங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

அஸ்கிரிய பீடம், மல்வத்த பீடம், கோட்டே பீடம், அமரபுர மஹா நிக்காய ஆகியவற்றின் மகாநாயக்க தேரர்களின் கையெழுத்துடன் குறித்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தலதா மாளிகையின் தியவதனே நில​மே பிரதீப் நிலங்கவும் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சகல பௌத்த

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]