சகதிப் புழுக்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எம். கேதீஸ்வரன் எழுதிய நாடகப் பிரதிகளின் தொகுப்பான “சகதிப் புழுக்கள்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை 25.05.2018 பிற்பகல் 2 இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரி பீடாதிபதி வி. இராஜேந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி சிவஞானம் ஜெயசங்கர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜெயரஞ்சனி ஞானதாஸ் உட்பட இன்னும் பல அதிதிகளும் ‪ அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]