க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு முக்கய அறிவித்தல்!!

இலங்கையின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த விடுத்துள்ளார்.

இதன்படி, சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், அந்தக் காலம்வரை இதற்கான விண்ணப்பத்தினை மேற்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள், பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, தனியார் விண்ணப்பதாரிகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவம் இன்றைய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள நிலையில், பாடசாலையை விட்டு விலகி உள்ளவர்கள் மாத்திரமே தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக விண்ண்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவராக இருந்துகொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது சட்ட விரோத செயலாகும். இந்த விடயம் தெரியவந்தால், அவர்கள் பரீட்சை தடைக்கு உள்ளாக நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]