க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு அரசின் முக்கிய அறிவித்தல்!

இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இப்பரீட்சைக்கு தோற்றவுள்ள பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரங்கள், தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை அனுமதிப் பத்திரம் கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அடையாள அட்டை இலக்கத்தை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தயோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டு, அனுமதிப் பத்திரத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]