விடைத்தாள் திருத்தும் இரண்டாம்கட்ட பணிகள் ஆரம்பம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை யின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.

இதற்காக, ஐந்து பாடசாலைகள் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர வித்தியாலயம், மாத்தறை மத்திய மகா வித்தியாலயம், குருணாகல சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கர வித்தியாலயம், கண்டி புனித அந்தோனி பாலிகா வித்தியாலயம் மற்றும் பதுளை ஊவா மத்திய மகா வித்தியாலயம் என்பனவே இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளன.

இந்த மதிப்பீட்டுப் பணிக்காக இன்னும் 19 பாடசாலைகளின் ஒரு பகுதி மூடப்படவுள்ளதாகவும், இவ்வாறான பாடசாலைகளில் இரு நடவடிக்கைகளும் ஏக காலத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.