க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்!

அடுத்த மாதம் க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதவுள்ள தேசிய அடையாள அட்டை இல்லாத மாணவர்கள் உடனடியாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பரீட்சையில் பங்குகொள்ளும் 95 சதவீத மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இந்த தடவை சாதாரணதர பரீட்சையில் பங்கேற்கின்றவர்களுக்கு விசேட தினங்கள் ஒதுக்கப்பட்டு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படமாட்டாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட பரீட்சை, நாடாளாவிய ரீதியாக உள்ள 4 ஆயிரத்து 661 பரீட்சை நிலையங்களில் நடைப்பெறவுள்ளன.

இந்த பரீட்சை நிலையங்களின் ஊடாக 6 லட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]