க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்!

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் நாளை(03) ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

மூன்று மணித்தியால பரீட்சை வினாத்தாளுக்காக, மேலதிகமாக 10 நிமிடம் வாசிப்பு நேரமாக வழங்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத தனிப்பட்ட பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]