க.பொ.த. உயர்தர மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியீடு

க.பொ.த. உயர்தர மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளது.

ஜனவரிமாதம் வெளியாகியிருந்த கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெயியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்காக 58,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறவித்துள்ளது. மேற்படி 58000ம் விண்ணப்பங்களின் மீள் பரிசீலனை பெறுபேறுகளே வெளியிடப்படவுள்ளது.

க.பொ.த. உயர்தர

இதேவேளை, 2016ஆம் ஆண்டு முதல் 2017ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக மாணவர்களை தெரிவுசெய்வதற்கான வெட்டிப் புள்ளிகள் எதிர்வரும் மே மாதத்தின் இறுதிப்பகுதியில் வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 2016 2017ம் கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். தற்போது விண்ணப்ப படிவங்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]