க.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளுக்கு தடை விதிப்பது தொடர்பான அறிவித்தல் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் தனியார் வகுப்புகள் , குழு வகுப்புகள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் , கலந்துரையாடல்கள் என்பன எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் செப்டம்பர் முதலாம் திகதி வரையும் மற்றும் 5ஆம் தர புலமைப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் தனியார் வகுப்புகள் , குழு வகுப்புகள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் , கலந்துரையாடல்கள் என்பன எதிர்வரும் 1ஆம் திகதி முதல் பரீட்சை முடிவடையும் வரையும் தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]