க.பொ.சாதாரண தர மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு..

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய சுற்றறிக்கை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 15 வயது பூர்த்தியான மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்காக சுமார் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் அடையாள அட்டைகளை விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.