க.பொத. சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்

நாடு முழுவதிலும் நான்காயிரத்து 561 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள பரீட்சையில் ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இரத்மலானையிலுள்ள விசேட தேவைகளை கொண்ட கல்லூரியிலும் தங்காலை, மாத்தறை, சிலாபம் மற்றும் கொழும்பு மெகசீன் சிறைச்சாலையிலும் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேராதனை போதனா வைத்தியசாலையிலும் மஹரகம அபெக்ஸ்ஸா வைத்தியசாலையிலும் இரண்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை இந்த பரீட்சை மத்திய நிலையங்களுக்கும் மேலதிக மண்டப கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பரீட்சையின் போது இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதே இதன் நோக்கமாகும். பரீட்சை காலை 8.30 இற்கு ஆரம்பமாகும். காலை எட்டு மணியளில் பரீட்சை மத்திய நிலையங்களில் சமூகம் அளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளனார். அனுமதி அட்டையில் பரீட்சைக்கான நேர அட்டவனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு பரீட்சைக்கு சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டைஇ பென்சில், பேனா தவிர்ந்த வேறு எந்த உபகரணங்களையும் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு எடுத்து வர அனுமதியில்லை.

பரீட்சையில் மூன்று மணித்தியாலங்கள் பரீட்சை வினாத்தாளுக்காக மேலதிகமாக 10 நிமிடம் வாசிப்பு நேரமாக வழங்கப்பட உள்ளதென பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்தார்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமானால் அது குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் 011 278 4208 அல்லது 011 278 4537 முதலான இரண்டு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் இடம்பெறும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு, வழங்கப்படுவதாக பொலிஸ ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் இடம்பெறும்போது, பரீட்சைகள் நிலையங்களினதும் அதனை சூழவுள்ள பிரதேசங்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு,காவற்துறை சார்ஜன் ஒருவரையும், கான்ஸ்டபிள் ஒருவரையும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு மேலதிகமாகஇ வினாத்தாள் மற்றும் விடைதாள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என;றும் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கபொத சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி நிறைவடையவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]