கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடிக்க ஏங்கும் ‘காபில்’ நாயகி

ஹ்ருத்திக் ரோஷனுடன் ‘காபில்’ படத்தில் டூயட் பாடிய யாமி கவுதம், தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், தமிழில் 2 படங்களில் தான் நடித்துள்ளதாகவும், அதில், தான் நடித்த ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ என்ற படத்தை கௌதம் வாசுதேவ் மேனன்தான் தயாரித்ததாகவும் தெரிவித்தார்.
  மேலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும், இப்படிப்பட்ட ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க எல்லா நடிகர்களும் ஆசைப்படுவார்கள் எனவும் கூறினார். கௌதம் படத்தில், எனக்கு பொருத்தமான கதாபாத்திரம் அமைந்தால், அதில், நிச்சயம் என்னுடைய முழு திறமையையும் காட்டுவேன் எனவும் யாமி கௌதம் தெரிவித்தார்.
gautham-menon
  கௌதம் வாசுதேவ் மேனன் படங்கள் தவிர, தற்போது வந்துள்ள தமிழ் படங்களில் , அட்லி இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜாராணி’தன்னை மிகவும் கவர்ந்தது எனவும், மணிரத்தினத்தின் படங்களும் தனக்கு பிடிக்கும் என்கிறார் கண் தெரியாமல் நடிக்கும் இந்த அழகு தேவதை.