கௌதம் கார்த்திக்கின் இந்திரஜித்

கௌதம் கார்த்திக்கின் இந்திரஜித்

இந்திரஜித்

கௌதம் கார்த்திக், சொனாரிகா படோரியா, அஸ்ரிதா ஷெட்டி, சுதான்ஷு பாண்டே நடித்துள்ள இந்திரஜித் படத்தை கலைப்புலி எஸ்.தாணு மகன் கலாபிரபு இயக்கியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கௌதம் கார்த்திக் இந்த திரைப்படத்தை பற்றி கூறியதாவது, ” .இந்திரஜித் படத்தில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதளவு சண்டைக் காட்சிகள் இருக்கிறது.” என கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் அருவியில் நடந்த படப்பிடிப்பில் நடித்தபோது, எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கௌதம் கார்த்திக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்திரஜித்

மேலும் கருத்து தெரிவித்த கௌதம் கார்த்திக் “ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் உயிரைப் பணயம் வைத்து நடித்துள்ளேன்.இருப்பினும் ஸ்டன்ட் மாஸ்டர்கள் பெப்சி விஜயன், ஸ்டன்ட் சிவா போன்றோரும் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்களும் என்னை அதிக பாதுகாப்புடன் கவனித்துக்கொண்டனர்.” என குறிப்பிட்டுள்ளார்.

இந்திரஜித்

46 இலட்சம் ரூபா செலவழித்து புதுச்சேரியில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்திரஜித் ஸ்டன்ட் காட்சிகள் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் எனவும், கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் உதவியாளர் கிருஷ்ண பிரசாத் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]