கோலி குடிக்கும் தண்ணீர் ஒரு லிட்டர் 600 ரூபாய்

கோலி குடிக்கும் தண்ணீர் ஒரு லிட்டர் 600 ரூபாய் என்று இந்திய ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, உடல் பராமரிப்புக்காக பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடிதண்ணீரைக் குடிப்பதாக இந்தியாவின் பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பிலான தகவல்களை தேட ஆரம்பித்துள்ளன.

விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பதில் அதிக கவனம் செலுத்தும் ஒரு வீரர். தினமும் உடற்பயிற்சி செய்வதை தவற விடுவதில்லை.

உடற்தகுதியில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள விராட் கோலி, மற்ற வீரர்களுக்கும் உதாரணமாகவும் திகழ்கிறார். அவரது உடற்தகுதி நிலையை பல கிரிக்கெட் வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

உடற் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேசமயம், கடும் உணவு கட்டுப்பாடுகளையும் கடை பிடித்து வருகிறார் விராட் கோலி. தான் குடிக்கும் தண்ணீரிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.

ஆரோக்கியம் தொடர்பான இணையதளத்தில் வெளியான தகவலின்படி, விராட் கோலி பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடிநீரை தான் அருந்துகிறார். இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் தண்ணீர் விலை ரூ.600 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]