கோலியின் சதத்துடன் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

கோலி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என பரிகொடுத்துள்ளது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியா.

இந்நிலையில் டர்பனில் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைப்பெற்றது. இதில் நாணயசுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 20, தவான் 35 ஓட்டங்கள் எடுத்து நல்ல ஆரம்பம் அளித்தனர். பின்னர் கைகோர்த்த கோலி 112, ரஹானே 79 மிக சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

கோலி மிக சிறப்பாக விளையாடி 112 ஓட்டங்களை குவித்தார். இது இவர் கடைசியாக விளையாடிய 4 ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் 3ஆவது சதம் இதுவாகும். சர்வதேச அளவில் இவர் அடிக்கும் 33வது ஒருநாள் போட்டி சதமாகும்.

கோலியின் சிறப்பான சேஸிங் சதத்தால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்திய வெற்றி பெற்றதையடுத்து 6 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]