கோலியிடம் மன்னிப்பு கேட்ட பிராட் ஹாட்ஜ்

இந்திய அணியின் தலைவர் விராட் கோலியின் தோள்பட்டை காயம் குறித்து விமர்சனம் செய்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் பிராட் ஹாட்ஜ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

இந்தியாஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கோலி விளையாடவில்லை. ஆனால், இதற்கு காரணம் அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். தொடரே என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயம் காரணமாக ஆடவில்லை எனும்போது ஐ.பி.எல். முதல் போட்டியில் இன்னும் 2 வாரங்களில் அவர் ஆடினால் அது அசிங்கமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

இது கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், தனது கருத்திற்கு இந்திய மக்கள், ரசிகர்கள், இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் குறிப்பாக விராட் கோலியிடம் மன்னிப்புக் கோருவதாக பிராட் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார். யாரையும் காயப்படுத்துவதோ, விமர்சிப்பதோ அல்லது தரக்குறைவாக பேசுவதோ தனது எண்ணம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

குஜராத் லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹாட்ஜ் விரைவில் இணைய உள்ளமை குறிப்படத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]