முகப்பு News Local News கோர விபத்தில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி மரணம்

கோர விபத்தில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி மரணம்

மட்டக்களப்பு – கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் திங்கட்கிழமை காலை 13.08.2018 இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி மரணமடைந்து விட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். ஆறுமுகம் (வயது 57) என்பவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சமயம் மரணித்தவராகும்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தாளங்குடாவிலிருந்து காத்தான்குடி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதியதுடன் வீதி மருங்கிலிருந்த மரம் மற்றும் கொங்கிறீற் கற்குவியல் என்பவற்;றில் போய் மோதி நின்றது.

இச்சம்பவத்தில் காரை செலுத்திச் சென்ற வங்கி முகாமையாளரும் காயமடைந்தார்.

கூலித் தொழிலாளியும் வங்கி முகாமையாளரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு பின்னர் படுகாயங்களுக்குள்ளான கூலித் தொழிலாளி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்தில் கார், சைக்கிள், கொங்கிறீற் கற்கள் என்பன நொருங்கிச் சேதமடைந்துள்ளன. பொலிஸார் சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com