கோயிலில் காமசூத்ரா புத்தகம் விற்க தடை

உலகிலேயே நன்கு அறியப்பட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்தியாவில் இருக்கும் கஜுராஹோ கோயிலில் காமசூத்ரா புத்தகத்தை விற்பதற்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்குசமூக ஊடக பயன்பாட்டாளர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹிந்து அமைப்பு ஒன்று இந்த தடை கோரிக்கையை விடுத்துள்ளது. பாலுணர்வை தூண்டும் கலைநயமிக்க சிலைகளுக்கு இக்கோயில் பெயர் பெற்றது. பஜ்ரங் சேனா என்ற அமைப்பு புத்தக விற்பனைக்கு தடைகேட்டு உலகப் புகழ்பெற்ற கஜீராஹோ கோயில் வளாகத்திற்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்துள்ளனர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய ஜோதி அகர்வால் என்ற பெண், ”மத ரீதியிலான முக்கியத்துவத்தை இக்கோயில்கள் பெற்றுள்ளன. இந்த புனிதமான வளாகத்திற்குள் காமசூத்ரா புத்தகத்தை விற்க எவ்வாறு அனுமதிக்கிறீர்கள் ? அவ்வாறு அனுமதிப்பதன் மூலம் இளைய தலைமுறையினரிடையே எவ்வாறு நாம் நன்னெறிகளை ஏற்படுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தக விற்பனை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்குழு போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    கோயிலில் காமசூத்ரா

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]