முகப்பு News Local News கோப்பாயில் வயோதிபத் தம்பதியர் மீது தாக்குதல்!

கோப்பாயில் வயோதிபத் தம்பதியர் மீது தாக்குதல்!

கோப்பாயில் வயோதிபத் தம்பதியர் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியை சேர்ந்த பகுதியிலேயே குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பல், அம்மன் கோவிலடியில் (77 வயதுடைய வயோதிபர் மற்றும் 70 வயதுடைய அவரது துணைவியார்) வயோதிபத் தம்பதியினரின் வீட்டிற்கு புகுந்து, அவர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவமானது 4பேர் கொண்ட கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாகவும், 6 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுத் குறித்த கும்பல் தம்பித்துள்ளதாகவும், கூறப்படுகின்றது

இத் தாக்குதலில் கடுமையான காயங்களுடன் பாதிக்கப்பட்ட வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com