முகப்பு News Local News கோத்தபாயவிடம் 3 மணி நேர விசாரணை

கோத்தபாயவிடம் 3 மணி நேர விசாரணை

கோத்தபாயவிடம் 3 மணி நேர விசாரணை

முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றவியல் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் இன்று (புதன்கிழமை) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அத்தோடு காலை 10 மணியளவில் குற்றவியல் திணைக்கள விசாரணையில் முன்னிலையான கோத்தபாயவிடம் சுமார் 3 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கீத் நொயர், தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து கீத் நொயார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியிருந்தார்.

கீத் நொயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் உட்பட 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com