கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்வதற்கு தடை

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்வதற்கு தடை விதித்துள்ளது  மேன்முறையீட்டு நீதிமன்றம்

கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை

இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதிபதி எல்.ரீ.பீ. தெஹிதெனிய மற்றும் ஸிரான் குணரத்ன ஆகியோர் தெரிவித்தனர்.

டீ.ஏ. ராஜ­பக்ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ சந்­தேக நப­ராக கரு­தப்­படும் நிலையில், அவர் நேற்று முன்­தினம் தாக்கல் செய்­த ரீட் மனுவை இன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டபோதே இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]