பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதியின் சகாக்கள்- நிறைவுக்கு வரும் நீதிமன்ற விசாரணைகள்

4 மில்லியன் ரூபாயை முறைக்கேடான முறையில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை நிறைவு செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

அதன்படி , வழக்கு விசாரணை இடம்பெறும் சிறப்பு மேல்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சந்தேகநபர்களுக்கு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

புதிதாக நிறுவப்பட்ட சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் முதலாவது வழக்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி , எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி குறித்த வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]