கோட்டா வழக்கை விசாரிக்க இடைக்கால தடை

கோட்டாபய ராஜபக்ஷ

அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள வழக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மீள்பரிசீலனை மனுவின் விசாரணைகள் நிறைவு பெறும் வரையில் குறித்த தடையுத்தரவு செல்லுபடியாகும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்த மனுவை மீண்டும் செப்டம்பர் மாதம் 28ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]