கோட்டாவின் சேவையை மறந்து விடாதீர்கள்

 கோதபாய ராஜபக்ஷ நாட்டுக்காக முன்னெடுத்த வேலைத்திட்டங்களை இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது எனவும், மக்கள் விட்ட தவறை சரிசெய்யும் இன்னொரு வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் கொழும்பு மிகவும் அழகான பராமரிக்கப்பட்டது. எமது ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் செயற்திட்டங்ககளின் கீழ் மிகச்சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கோத்தாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் எதையும் இலங்கை மக்கள் எவரும் மறந்துவிடக்கூடாது.

இன்று கொழும்பின் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. அபிவிருத்திகள் அனைத்துமே தடைப்பட்டுள்ளன. சரியான வழிநடத்தல் ஒன்று இல்லாமையே இதற்குக் காரணமாகும்.

இப்போது மக்கள் எடுக்கும் தீர்மானமே அடுத்த கட்டமாக நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல ஆரம்பமாக அமையும். அதில் மக்களின் தீர்மானமே நாம் எமது போராட்டத்தை அரசாங்கத்திட்கு எதிராக மாற்றியமைக்க அடிப்படையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருடர்களைத் தண்டிப்பதாக மக்கள் மேடையில் கூறிக் கொண்டு, திருடர்களுடனே கைகோர்த்து அமைச்சரவையில் ஜனாதிபதி செயற்பாட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.