கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு மக்கள் அஞ்சுவர்: ரஞ்சன்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் உள்ள அனைவரும் அச்சமடைவார்கள் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகாவை தூக்கில் போட வேண்டும் என பகிரங்கமாகத் தெரிவித்த, மேர்வின் சில்வாவின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வெள்ளை வேன் கடத்தல்களின் மூலக்காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் செயற்பட்டார்.

அத்துடன், உடலில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வந்து நிற்பவனைப் பார்த்து ஏனையவர்கள் அச்சப்படுவது போன்றே இந்நிலைமை இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

020 ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய போட்டியிடுவார் என ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்து வருகின்ற நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]