கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசேட மேல் நீதிமன்றம் மீண்டும் விசாரணை

கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசேட மேல் நீதிமன்றம் மீண்டும் விசாரணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு வழங்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் அரச நிதியைப் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்காக அவர் முன்னிலையாகியுள்ளார்.

இதற்கு முன்னரும் அவரிடம் பல மணி நேரங்கள் விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையில், அவர் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் வீரகெட்டிய பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்திற்கு, அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கோட்டா உள்ளிட்ட ஏழு பேர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த விசாரணைகளை நிதிமோசடி விசாரணைப் பிரிவே முன்னெடுத்து வந்த நிலையில், கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் எவ்வித நடவடிக்கையும் நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ள வில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது

இதனை தொடர்ந்து விசேட நீதிமன்றிற்கு இவ்வாறான வழக்குகள் மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]