கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான நிதி முறைக்கேடு வழக்கு நிறைவு

கோட்டாபய உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான நிதி முறைக்கேடு வழக்கு நிறைவு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான நிதி முறைக்கேடு தொடர்பான வழக்கு நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறித்த வழக்கின் அறிக்கை விசேட மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்காலை வீரக்கெட்டிய டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த நிதியினை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]