கோட்டாபய உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் – சட்டமா அதிபர்

90 மில்லியன் ரூபாய் செலவில் வீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ஷ நினைவிடம் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் கீழ், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேர் தவறிழைத்துள்ளனர் என்று சட்டமா அதிபர் கூறியுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, இது தொடர்பான விரிவான அறிக்கையை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்தனர்.

நினைவிடத்தை அமைப்பதற்கு இலங்கை கடற்படையினரைப் பயன்படுத்தியதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.