கோடிகளில் புரளும் நடிகைகள் யாரென தெரியுமா?

நடிகைகள்

கோடிகளில் புரளும் நடிகைகள் யாரென தெரியுமா?

தமிழ் திரைப்பட நடிகைகளின் சம்பளம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியாகும் படங்கள் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் குவித்து நல்ல லாபம் சம்பாதிக்கிறது. முன்னணி கதாநாயகர்கள் படங்களை போல் அதிக செலவும் இந்த படங்களுக்கு இல்லை.

இதனைப் பார்த்த தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளை மட்டும் வைத்து படங்கள் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி கதாநாயகிகள் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளார்கள். புதிய சம்பள பட்டியல் விகிதத்தில் நயன்தாராவும், அனுஷ்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம் ரூ.5 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

நயன்தாரா ஆரம்பத்தில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினார். அதன் பிறகு அவரது படங்கள் வெற்றி பெற்றதால் ரூ.2 கோடியாக உயர்த்தினார். ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன், நானும் ரவுடிதான் என்று அவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக நன்றாக ஓடி வசூல் குவித்தன. சமீபத்தில் கதாநாயகன் இல்லாத அறம் படத்தில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படமும் வெற்றி பெற்றது.

தற்போது அவர் கைவசம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் உள்ளன. தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறார். அஜித்குமார் ஜோடியாக விஸ்வாசம் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்துக்கு அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்காவின் மார்க்கெட் பாகுபலி படத்துக்கு பிறகு தாறுமாறாக உயர்ந்தது. அதற்கு முன்பு ரூ.2 கோடி, ரூ.3 கோடி என்று வாங்கி வந்தார்.

பாகுபலி-2 படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. சமீபத்தில் வெளியான பாகமதி படமும் லாபம் பார்த்துள்ளது. இதனால் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார். காஜல் அகர்வால் ரூ.1½ கோடி வாங்கி வந்தார். அவரது சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.

தமன்னாவும் சம்பளத்தை ரூ.1½ கோடியில் இருந்து ரூ.2 கோடியாக உயர்த்தி உள்ளார். சமந்தா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவரது சம்பளம் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரகுல் பிரீத் சிங் வளரும் நடிகையாக இருக்கிறார். கார்த்தி ஜோடியாக இவர் நடித்து திரைக்கு வந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் வசூல் குவித்தது. இதைத்தொடர்ந்து இவர் சம்பளம் ரூ.1½ கோடியாக உயர்ந்துள்ளது.

அமலா பால் ரூ.2 கோடி கேட்கிறார். கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வாங்குகிறார். திரிஷா ரூ.1½ கோடி கேட்பதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]