புதிய அரசியலமைப்பு யுத்த வெற்றியை கிளறக்கூடாது : கோடாபய

பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டை ஐக்கியப்படுத்திய வெற்றிகளைத் திருப்பியளிக்க புதிய அரசியலமைப்பு அல்லது நாடாளுமன்றம் அனுமதிக்கக்கூடாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதனன்று கொழும்பில் ‘எலியா’ (ஒளி) கருத்துக்களம் ஆரம்பித்து உரையாற்றுகையில், அவர் இதனை தெரிவித்தார்.

“புதிய அரசியலமைப்பைப் பற்றி பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பல்வேறு துறை வல்லுனர்கள் ‘எலியாவை’ உருவாக்க முடிவு செய்தார்கள். புதிய அரசியலமைப்பை கொண்டு வரக்கூடாது என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் “என்று அவர் கூறினார்.

தற்போதைய அரசியலமைப்பில் குறைபாடுகள் இருக்கின்றன என்று அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியதற்கு பின்னால் இருந்த நோக்கங்கள் பயங்கரமானவை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]