கோக்கையின் மன்னன் பப்லோ எஸ்கோபர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 15 

கோக்கையின் மன்னன் பப்லோ எஸ்கோபர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 15 சுவராஸ்சியமான உண்மைத்  தகவல்கள்.

பப்லோ எஸ்கோபரின் முழுப் பெயர் பப்லோ எமிலியோ எஸ்கோபர் கவிரியா. அவர்டிசம்பர் 1, 1949ம் ஆண்டு கொலம்பியாவிலுள்ள ரியோநெக்றோவில் பிறந்தார்.எஸ்கோபர் ஒரு பயங்கரவாத போதை கடத்தல்காரன், போதைப் பொருள் முதலாளி அதுமட்டுமல்லாது மெடலின் கூட்டமைப்பின் நிறுவனர், அது போதைப் பொருட்களை விநியோகிக்கும் அமைப்பாகும் . பப்லோ பாஸ், லொட், கோக்கையின் மன்னன் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டார். குற்றவாளிகள் வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரனாகக் கருதப்படுகிறார்.

பப்லோ எஸ்கோபர் பற்றிய சுவராஸ்சியமான 15 உண்மைத் தகவல்கள் இதோ !!

1.
பப்லோ எஸ்கோபர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதற்கு முன்னர் கார்திருடனாக இருந்தார்.

15 facts of Pablo Escobar

 

2.
அமெரிக்காவிற்கு கடத்திவரப்பட்ட கோக்கையினில் 80 % எஸ்கோபரின் மெடலின் கூட்டமைப்பின் மூலமாக வந்தவையாக மதிப்பிடப்படுகிறது.

15 facts of Pablo Escobar

 

3.
அவரின் தனிப்பட்ட வருமானம் மட்டுமே ஆண்டுக்கு 21.9 பில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பிடப்படுகிறது. 1990 களிலேயே அவரின் நிகர மதிப்பு 30 பில்லியன் அமெரிக்கன் டொலராகும்.(2016 ஆம் ஆண்டின் மதிப்பின் படி 55 பில்லியன் அமெரிக்கன் டொலர்)

 

4.
இதுவே அவரின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது. புவெர்டொ ட்ரின்பொவில் உள்ள அவரின் சொகுசு பண்ணை வீட்டுடன் ஒரு தனியார் மிருகக்காட்சிசாலையும் உள்ளடக்கியது, அதில் யானைகள், நீர் யானைகள், ஒட்டகச்சிவிங்கி எனப் பல விலங்குகளை கொண்டது.

 

5.
விமானத்தின் டயர்களின் ஊடாக எஸ்கோபர் கோக்கையினை கடத்தினார் என நம்பப்படுகிறது, இதன் மூலமாக விமானிகள் நாளொன்றிற்கு அதிக பட்சமாக 5 லட்சம் அமெரிக்க டொலர் வரை சம்பாதித்தனர்.

 

6.
சரணடைவதிற்கான சட்டங்களை மாற்றுவதற்காக எஸ்கோபர் கொலம்பியாவின் 10 பில்லியன் டொலர் கடனை அடைப்பத்திற்கு முன் வந்தார், அவ்வளவு பணக்காரனாக இருந்தார்.

7.
அவர் 4000 பேரின் கொலைக்கு காரணமாய் இருந்தார், இதில் 1000ம் காவலர்கள், 200 நீதிபதிகள், பல நிருபர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர்.

 

8.
பணத்தை கட்டி வைக்க பயன் படுத்தும் ரப்பர் பேண்ட்ற்காக மட்டும் மாதம் 2500 அமெரிக்க டொலர்களை அவர் செலவிட்டார்.

9.
1980களின் கடைசியில் கொலம்பிய அதிகாரிகள் அவரின் சில சொத்துக்களை பறிமுதல் செய்த போது மாபெரும் வாகனப் படையைக் கண்டனர், அதில் 20 வானுர்திகள், 142 விமானங்கள், 32 படகுகள், 141 வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியற்றை கொண்டிருந்தது.

10.
இவையனைத்தையும் தவிர தான் வைத்திருந்த இரண்டு நீர்முழ்கிக் கப்பல்கள் மூலமும் கோக்கையினை அமெரிக்காவிற்கு கடத்தினார்.

 

11.
எஸ்கோபரால் அமெரிக்காவிற்கு ஒரு தடவையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவில் கடத்தப்பட்ட கோக்கையினின் அளவு 51000 பவுண்டுகள்(23000கிலோ).

 

12.

தனது போதைப் பொருள் வணிகம் உச்சத்தில் இருந்த போது அவர் நாள் ஒன்றுக்கு 15 டொன் கோக்கயினைக் கடத்தினார்.

 

 

13.
அவர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், எஸ்கோபர் கொலம்பியாவின் ஏழை மக்களுக்கானா பல திட்டங்களுக்கு நிதியுதவி அளித்திருந்தார்.

 

14.

பப்லொ எஸ்கோபர் தனது 44வது வயதில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரால் உதவி பெற்ற சுமார் 25000 மேற்பட்டோர் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

 

15.
அவரின் இறப்பிற்குப் பின், அவரது சொகுசுப் பண்ணை வீடு அங்கிருந்த விலங்குகள், மற்றும் கார் சேகரிப்பைக் கொண்டு தீம் பார்க்காக மாற்றப்பட்டது

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]