கொழும்பை சுற்றிவளைக்க மஹிந்தவின் படைகள் தயார்…..

நாளை கொழும்பில் நடத்தப்படவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கான சகல தயார்படுத்தல்களையும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பூர்த்தி செய்துள்ளனர்.
இதன்படி நாளைய தினத்தில் இலட்சக் கணக்கானவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

தேவையான பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் வேன் , லொறி உள்ளிட்ட வேறு வாகனங்களையும் தயார்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் போராட்டத்திற்கு வரும் மக்களுக்கு தேவையான உணவு , குடி நீர் போத்தல்கள் உள்ளிட்டவை தொடர்பான பொறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்று காலை மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சி தலைவர்கள் கூடவுள்ளதுடன் இதன்போது தமது பேரணிகளை ஆரம்பிக்கும் இடம் மற்றும் இறுதியாக சகலரும் ஒன்றிணையும் இடம்தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]