கொழும்பு வருகிறார் சீன உயர்மட்டத் தலைவர்

           கொழும்பு வருகிறார் சீன உயர்மட்டத் தலைவர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் அடுத்த வாரம் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலகத் திணைக்களத்துக்கான உதவி அமைச்சர் வாங் யாஜுன், வரும் 12ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, வாங் யாஜுன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய காங்கிரஸ் மாநாடு குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.

இந்த மாநாடு, பீஜிங்கில் கடந்த ஒக்ரோபர் 18ஆம் திகதி முதல்  24ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]