கொழும்பு மேயர் பதவிக்கு ரோஸி சேனாநாயக்க போட்டி ?

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஸி சேனாநாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு குறிப்பிட்ட ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டாலும் கூட, ஏனைய சகல மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என்பவற்றுக்கான மேயர், உப மேயர் மற்றும் தலைவர் போன்ற பதவிகளுக்கு உரிய இடங்களை ஐக்கிய தேசியக் கட்சி திறந்து விட்டுள்ளன.